DAXSLY – Samacheer kalvi – Excerpts by Writer Pa Ra

excerpt

சமச்சீர் படுகொலை வழக்கு

இந்த வருடம் பத்தாம் வகுப்பு மாணவர்கள் படித்திருக்க வேண்டிய – தெய்வாதீனமாகத் தப்பித்த – சமூக அறிவியல் புத்தகத்தில் இருந்து சில வரிகளைக் கீழே கொடுத்திருக்கிறேன். இதில் உள்ள சொற்பிழை, பொருட்பிழை, இலக்கணப் பிழைகள், சொற்றொடர் அமைப்புச் சிக்கல்கள் எதற்கும் நான் பொறுப்பில்லை. புத்தகம் முழுவதுமே ஒரு சிறந்த நகைச்சுவை நூலை வாசித்த உணர்வைத் தந்தது என்பதை அவசியம் குறிப்பிட விரும்புகிறேன். சமச்சீர் பாடத்திட்டங்களைத் தமிழக அரசு ரத்து செய்ததற்கு அரசியல் காரணங்கள்தாம் முக்கியம் என்றாலும் அரசோ, முதல்வரோ கவனித்திருக்க வாய்ப்பில்லாத சில நியாயமான காரணங்களும் இருப்பதை நாமாவது உணரலாம்.

இந்த அற்புதமான நூலை உருவாக்கிய ஆசிரியப் பெருமக்களை நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுகிறேன்.

· காமராஜர் தமிழக முதலமைச்சராக ஒன்பது ஆண்டுகள் பணியாற்றினார். பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தினார். மதிய உணவுத்திட்டம், புதிய பள்ளிகளைத் திறந்து, இலவச கல்வி வழங்குதல், வேளாண்மையை மேம்படுத்துதல், கால்வாய்களை வெட்டுதல், அணைகளைக் கட்டுதல் மற்றும் புதிய தொழிற்சாலைகளை அமைத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார். தேசிய அரசியலில் முக்கிய பங்கு வகித்தார். இதனால் அரசரை உருவாக்குபவர் எனப் போற்றபட்டார்.

· சாது மகாராஜா மூங்கிர் மாவட்டத்திலுள்ள செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார். இவர் வைணவராக மாறினார். இவருக்குமுன் இவரது குடும்பத்தினர் அனைவரும் சைவ சமயத்தை சார்ந்து சிவனை வழிபட்டனர்.

· சுற்றுச்சூழல் அனைவருக்கும் சொந்தமானது. ஒவ்வொருவரின் தேவையை பூர்த்தி செய்யக்கூடியதே அன்றி ஒவ்வொரு மனிதனின் பேராசைகளை அல்ல. பெருகிவரும் பேராசை நம்மை மிகவும் கடினமான சூழலுக்கு வெவ்வேறு பிரச்சனைகளாக கொண்டு செல்கிறது.

· 1858ஆம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி இந்தியாவின் கடைசி தலைமை ஆளுநரும் முதலாம் வைசிராயும் ஆன கானிங் பிரபு அலகாபாத்தில் நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் விக்டோரியா மகாராணியின் பேரறிக்கையை வெளியிட்டார். அது இந்திய மக்களின் மகாசாசனம் என்று கருதப்பட்டது. இப்பேரறிக்கையின் படி இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை இனி இங்கிலாந்து அரசி நேரடியாக மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டது. எனவே அவருக்கு பதிலாக அவரது பிரதிநிதி இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டது.

· கி.பி. 1939 முதல் கி.பி. 1945 வரை நடைபெற்ற இரண்டாம் உலகப்போர், உலகளாவிய ஒரு பெரும் போராக கருதப்படுகிறது.

· ஹிட்லர் ஜெர்மனியின் பெருமையை வெளிப்படுத்தினார். ஜெர்மானியர்கள் உலகின் மிக உயர்ந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதில் அவர் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். நார்டிக் ஜெர்மானிய இனத்தினர் மிக உயர்ந்தவர்கள் என்றும், செமிடிக் யூதர்கள் மிகவும் தாழ்ந்தவர்கள் என்றும் கருதினார். நார்டிக் இனத்தின் தனித்தன்மையைக் காக்கும் பொருட்டு செமிடிக் யூதர்களை வெறுத்து ஒதுக்கினார். அவரது வெறுப்பின் உச்சக்கட்டமே யூதர்களின் படுகொலை ஆகும். ஹிட்லர் செயல்பாடு, வன்முறை தீவிரவாதம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டிருந்தார். மக்கலின் உரிமைகள் பறிக்கப்பட்டன… [மேலும் நீளும் இப்பகுதியின் தலைப்பு  ஹிட்லரின் சாதனைகள்]

· கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் ஆட்சியாளர்கள் மற்றும் அறிவியல் அறிஞர்கள் எதிர்பார்த்த வண்ணம் உலக அமைதிக்கு ஏற்பட்ட பங்கமே முதல் உலகப்போர் என்று கருதப்படுகிறது.

· பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு ஒரே ஒரு நிலப்பகுதிதான் இருந்தது. இதைச் சுற்றி பெருங்கடல்கள் சூழ்ந்திருந்தன. இவ்வாறு இருந்த நிலப்பகுதிக்கு ‘பாஞ்சியா’ என்றும் அதைச் சுற்றியுள்ள நீர்ப் பகுதிக்கு ‘பாந்தலாசா’ என்றும் அழைக்கப்பட்டது. இவ்வாறு பரந்த நிலப்பகுதி இரு பகுதிகளாகப் பிரிந்தது.

· இராமகிருஷ்ண இயக்கம், இராமகிருஷ்ண பரமஹம்சரின் பெயரை அடிப்படையாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்டது. இது ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம். சுவாமி விவேகானந்தர் என்பவரால் 1897 ஆம் ஆண்டு மே 1ம் நாள் துவங்கப்பட்டது.

· வல்லரசு நாடுகளின் பெருந்தலைவர்கள் தங்களது கொள்கைகளை மறந்து போலியான அமைதி கொள்கையினைப் பின்பற்றினர். அவர்களது கொள்கையினை ஏகாதிபத்திய நாடுகள் ஏற்றுக்கொள்ள மறுத்தன. இது இரண்டாம் உலக போருக்கு வழி வகுத்தது.

· பன்னாட்டு நிறுவனங்கள் என்பது பல நாடுகளில் தங்களது தொழிற் நிறுவனங்களை தொடங்கி நடத்தி வரும் அமைப்புகளாகும்.

· பொருட்கள் என்பது உற்பத்தி செய்யப்பட்ட கார்கள், இரு சக்கர வாகனங்கள், கப்பல்கள், இரயில் எஞ்சின்கள், பேனா, பென்சில், அரிசி, கோதுமை மற்றும் சமையல் எண்ணை போன்ற பொருட்களைக் குறிக்கும்.

· இந்திய மொழிகளின் வளர்ச்சி இந்திய இலக்கியங்கள் உன்னத நிலையை அடைய உதவுகின்றன.

மற்ற பாடங்களையும் இப்போது தீவிரமாக வாசித்து வருகிறேன். தமிழ்ப் பாடநூலை வாசித்து முடித்துவிட்டேன். அது இந்த சமூக அறிவியல் புத்தகத்தைக் காட்டிலும் பல மடங்கு உயர்ந்த நகைச்சுவை உணர்வுடன் எழுதப்பட்டிருக்கிறது. வாசகர்கள் ஏகோபித்து விரும்பிக் கேட்டால் அதிலிருந்தும் சில வைரமணிகளைப் பொறுக்கிப் போடலாம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s