Yentily – Gold rate இந்தியா நினைத்தால் தங் கத்தின் விலையைக் குறைக்கலாம்: எஸ். குருமூர்த்தி

இந்தியா நினைத்தால் தங்கத்தின் விலையைக் குறைக்கலாம்: எஸ்.குருமூர்த்தி

First Published : 30 Aug 2011 03:42:30 AM IST

Last Updated :

விடியல் அமைப்பின் சார்பில் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் (இடமிருந்து) அமைப்பின் தலைவர் ஆர்.எம். சுப்பையா, பத்திரிகையா

சென்னை, ஆக. 29: இந்திய அரசு நினைத்தால் தங்கத்தின் விலையைக் குறைக்க முடியும் என்று பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி தெரிவித்தார்.

சென்னை திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் விடியல் என்ற அமைப்பு திங்கள்கிழமை நடத்திய நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

1971 வரை தங்கத்துக்கு நிகராகவும், உலகின் நாணயமாகவும் அமெரிக்க டாலர் மதிக்கப்பட்டது. தங்கத்தைக் கொடுத்து உலக நாடுகள் டாலரை வாங்கி சேமித்தன. வியத்நாம் போருக்குப் பிறகு அமெரிக்காவின் பொருளாதாரம் சரிய ஆரம்பிக்க, டாலரைக் கொடுத்து விட்டு தங்கத்தைக் கேட்க ஆரம்பித்தார்கள். இதனால் அமெரிக்காவின் தங்கத்தின் கையிருப்பு குறைய ஆரம்பித்தது. அதனால் 1971-க்குப் பிறகு டாலரைப் பெற்றுக் கொண்டு தங்கத்தைக் கொடுக்க முடியாது என அமெரிக்கா அறிவித்தது.

அமெரிக்காவில் கடனில் வாங்கிய வீடுகளின் உயர்ந்த மதிப்பின் அடிப்படையில் வீட்டுப் பத்திரங்களை அடமானமாகக் கொண்டு கடன் கொடுக்க ஆரம்பித்தார்கள். வாங்கிய கடனை அவர்களால் அடைக்க முடியவில்லை. அதனால் அமெரிக்க வங்கிகள் திவாலாகின. அதனால் 2008-ல் அமெரிக்கா மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது.

உலகின் பல நாடுகளில் அமெரிக்கா கடன் வாங்கி குவித்துள்ளது. அமெரிக்காவில் 26 கோடி கார்களும், 2.6 லட்சம் தனியார் விமானங்களும் உள்ளன. இவை அனைத்தும் கடனில் வாங்கப்பட்டவை. 56 சதவீத அமெரிக்கர்களுக்கு சொந்த வீடு உள்ளது. ஆனால், அதில் 52 சதவீத வீடுகள் கடன் வாங்கி கட்டப்பட்டவை. இது செல்வத்தின் அடையாளம் அல்ல.

அமெரிக்கா அச்சடித்த டாலர்களில் 40 சதவீதம் வெளிநாடுகளில் உள்ளன. இவற்றை வேறு வழியின்றி வைத்திருக்க வேண்டிய கட்டாயம் பல நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது. சீனாவின் மொத்த சேமிப்பில் 3-ல் 1 பங்கு அமெரிக்க டாலராக உள்ளது.

எனவே, அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியால் சீனா உள்ளிட்ட உலக நாடுகளின் பொருளாதாரமும் பாதிக்கப்படும். அதனால்தான் அமெரிக்காவின் பொருளாதாரம் சிறப்பாக இருக்க வேண்டும் என உலக நாடுகள் விரும்புகின்றன.

அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடியால் உலகின் அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் பாதிக்கப்படும். அதில் சந்தேகம் இல்லை. இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் குறைவான அளவே பாதிப்பு ஏற்படும். அதற்கு காரணம் இந்தியர்களின் சேமிக்கும் கலாசாரம். இப்போது நாட்டின் மொத்த உற்பத்தியில் 37 சதவீதம் சேமிப்பாக உள்ளது.

அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருவதால் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு குறையக் குறைய தங்கத்தின் விலை அதிகரிக்கும்.

இப்போது அமெரிக்காவிடம் 8,600 டன்னும், சீனாவிடம் 4,600 டன்னும், இந்தியாவிடம் 1,600 டன்னும் தங்கம் கையிருப்பில் உள்ளது. 1993-ல் பத்திரங்கள் மூலம் 5 ஆயிரம் டன் தங்கத்தை ரிசர்வ் வங்கி வாங்கி சேமிக்க வேண்டும் என்று நான் (குருமூர்த்தி) ஆலோசனை கூறினேன். ஆனால், அதனை அரசு ஏற்கவில்லை. அப்போது அதனை எதிர்த்தவர்கள் இப்போது வருத்தப்படுகிறார்கள்.

இப்போது இந்திய மக்களிடம் நகையாக இல்லாமல் வெறும் தங்கமாக 18 ஆயிரம் டன் இருப்பதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில் 15 ஆயிரம் டன் தங்கத்தை பத்திரங்கள் மூலம் ரிசர்வ் வங்கி வாங்கி இருப்பு வைத்தால், இந்திய அரசு தங்கத்தை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படாது.

சுமார் 1,000 டன் தங்கத்தை இறக்குமதி செய்யப் போவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. நமது ரிசர்வ் வங்கியிடம் தேவையான அளவு தங்கம் கையிருப்பில் இருந்தால் இந்த 1,000 டன் தங்கத்தை ரிசர்வ் வங்கியிடம் இருந்தே இந்திய அரசு வாங்கிக் கொள்ளலாம். இதன் மூலம் உலகச் சந்தையில் தங்கத்தின் விலை சரியும்.

ஏனெனில் தங்கம் இல்லாமல் இந்தியர்களால் இருக்க முடியாது. தங்கம் என்பது இந்தியர்களுக்கு முதலீடு. உலகில் விற்பனையாகும் தங்கத்தில் மூன்றில் இரண்டு பங்கை இந்தியர்கள்தான் வாங்குகிறார்கள்.

மக்களின் சேமிக்கும் கலாசாரத்தால் இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக உள்ளது.

2035-ல் இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் உலகின் பொருளாதார சக்தி மிக்க நாடுகளாகத் திகழும் என்றார் எஸ்.குருமூர்த்தி.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s